Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
தலித் இயக்கம் பற்றிக் குறிப்பிடுக.
நிறவெறிக்கு எதிராகவும், சாதி ஒடுக்குமுறைகளுக்கு
எதிராகவும் ஆங்காங்கே உலகின் பல்வேறு இடங்களில்
எழுப்பப்படும் கண்டனக் குரல்கள் அனைத்தையும் இந்த
இயக்கத்திற்குள் இணைக்கலாம். இந்திய நாட்டில், தலித்
என்பது, ஒடுக்கப்பட்ட, தீண்டாமைக்கு உள்ளான
மக்களைக் குறிக்கிறது. தலித்களுக்கு எதிரான
ஒடுக்குமுறைகளை ஒழிக்க, தலித் இயக்கம் தலித் மக்களின்
குரல்களை ஒருங்கிணைத்துள்ளது.