தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  1. ஞானப்பால் உண்ட செய்தியினைச் சுருக்கமாக எழுதுக.

    தந்தையார் சிவபாத இருதயரோடு சீர்காழித்
திருக்குளத்திற்குப் பிள்ளையார் என்ற இளமைப் பெயரை
உடைய சம்பந்தர் 3 வயதில் குளிக்கச் சென்றார்.
திருக்குளத்திற்கு அருகில் இவர் நிற்க தந்தையார் நீருக்குள்
மூழ்கி மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். சிறிது
நேரமாக, நீரிலிருந்து தந்தை வெளிவராததால் கோபுரத்தைப்
பார்த்துச் சம்பந்தர் ‘அம்மே, அப்பா’ என்று கூறி அழுதார்.
இறைவன் அவருக்கு உமையம்மையின் மூலம் ஞானப்பாலை
ஊட்டச் செய்தார். இதுமுதல் ஞானம் கைவரப் பெற்று
ஞானசம்பந்தர் ஆனார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:04:06(இந்திய நேரம்)