தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அச்சிடும் முறைகள்

5.3 அச்சிடும் முறைகள்

    அச்சடிப்பதற்கு முன்னால் அச்சிடப்படும் செய்திகள்
அடுக்கப்பட்டுப் பக்க அளவில் முறைப்படுத்தப்படுகின்றன
அதை அச்சுச் கோத்தல் என்பர்.

5.3.1 அச்சுக் கோத்தல்

    அச்செழுத்துகளை அடுக்குவதற்கு இரண்டு முறைகள்
தற்போதும் கையாளப்படுகின்றன. அவை:

    1) கையால் அச்சுக் கோத்தல்
    2) அச்சு வார்ப்புப் பொறியின் மூலம் அச்சுக் கோத்தல்

என்பனவாகும்.

• கையால் அச்சுக் கோத்தல்

    பல்வேறு குழிகளில்     நிரப்பப்பட்ட     பலவகை
எழுத்துகளைச் செய்திகளுக்கு ஏற்ப, பயிற்சியுள்ள அச்சுக்
கோப்பாளரின் உதவியால் அடுக்கி அச்சிடுவது ஒரு
வகையாகும். இம்முறையைப் பின்பற்றுவதால் காலம்
அதிகமாகும். அதிக அளவில் செய்திகள் இருப்பின் அவற்றை
விரைவாக அடுக்கி அச்சிட முடியாது. இருப்பினும் சிறிய
இதழ்களில் இம்முறை இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. பல
ஆண்டுகள்     இம்முறையைக்     கையாண்டு
பணிபுரிந்தவர்களால்தான் இந்த வகை அச்சிடும் முறையினை
விரைவாகச் செய்ய முடியும்.

    

5.3.2 அச்சு வார்ப்புப் பொறியில் அச்சுக் கோத்தல்

    அச்சு வார்ப்புப் பொறிகளின் மூலம் அச்சுக் கோக்கும்
முறையே 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இதழியல்
உலகில் பெரிதும் பின்பற்றப்பட்டு வந்தது. (தற்போது
பெரும்பாலும் அனைத்து இதழியல் அச்சுக்கூடங்களும் டி.டி.பி
D.T.P, - எனப்படும் கணினி தட்டச்சுமுறைக்கு மாறிவிட்டன
என்பது அறிக.).

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:14:45(இந்திய நேரம்)