தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.1 வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்


     உருபுகள் பெற்றுவரும் வேற்றுமைகள் இரண்டு முதல் ஏழு வரை மொத்தம் ஆறு என முன்னர்க் கூறப்பட்டது.இந்த ஆறு வேற்றுமைகளின் உருபுகள் வெளிப்பட நின்று தொடரும் தொடர்வேற்றுமைத்தொகாநிலைத் தொடர் எனப்படும்.

(எ.டு.) பாடத்தைப் படித்தான் - இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத்         தொடர்
கத்தியால் குத்தினான்    - மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் மகளுக்குக் கொடுத்தான்- நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் ஏணியில் இறங்கினான் - ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் நண்பனது வீடு     - ஆறாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் வானின்கண் நிலா     - ஏழாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)