தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A03142 - பல்லவர் வரலாறு
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
    இந்தப் பாடம் பிற்காலப் பல்லவ அரசர்களைப் பற்றி
விளக்குகிறது. பிற்காலப் பல்லவரின் முதல் மன்னனான சிம்ம
விஷ்ணுவின் பின் வந்தவர்கள் பல்லவ    ஆட்சியை
நிலைபெறச் செய்ததைக் காட்டுகிறது. பல்லவ ஆட்சி பற்றி
அறிய உதவும் மூலங்களான செப்பேடு, கல்வெட்டு
முதலியவை பற்றிக் குறிப்பிடுகிறது. பல்லவ மன்னர்களில்
சிறந்து விளங்கிய முதலாம் மகேந்திரவர்மன், முதலாம்
நரசிம்மவர்மன் ஆகியோரைப் பற்றியும் சீன, வழிப்போக்கன்
இயூன்சிங் காஞ்சிக்கு வருகை தந்ததையும் கூறுகிறது.
பல்லவர்கள், குடைவரைக் கோயில்கள், கட்டுமானக்
கோயில்கள் முதலியவற்றைக் கட்டியதைக் குறிப்பிடுகிறது.
நந்திக்கலம்பகம் எனும் நூல் போற்றிய நந்திவர்மனைப்
பற்றிக் குறிப்பிடுகிறது. பல்லவர் ஆட்சிமுறை பற்றி
விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
பெறலாம்?
பல்லவர்கள் எந்த மரபினர் என்பது பற்றிய ஆராய்ச்சியாளர்
கருத்துகளை அறியலாம்.
பல்லவர் ஆட்சி பற்றி அறிய உதவும் மூலங்களான பல்லவர்
காசுகள், கல்வெட்டுகள், நடுகற்கள் முதலியவற்றைத் தெரிந்து
கொள்ளலாம்.
முதலாம் மகேந்திரவர்மன் சமணத்திலிருந்து நாவுக்கரசரின்
துணையால் சைவத்திற்கு மாறியதை உணரலாம்.
முதலாம் நரசிம்மன் வாதாபியை வென்றதைக் குறிப்பிட
இயலும்.
மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் மாமல்லபுரம் சிறந்து
விளங்கியதக் காணலாம்.
பல்லவர் கால ஆட்சிமுறை பற்றி விளக்கிக்
கூறலாம்.
அறிவை வளர்க்கும் கல்விக் கூடங்கள் நிறுவியதை
எடுத்துரைக்க முடியும்.
கலைகள் இவர்கள் காலத்தில் சிறந்து விளங்கியதைச் சுட்ட
இயலும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)