தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடமுன்னுரை

3.0 பாட முன்னுரை


     ஏறத்தாழ கி.பி.846இல் தொடங்கி கி.பி.1279 வரை தமிழகம்
முழுவதையும் தங்கள் பேரரசின் கீழ்க் கொணர்ந்து நல்லாட்சி
செய்த சோழ அரசர்களின் வரலாறே பிற்காலச் சோழர்
வரலாறு எனக் கொள்ளப்பெறுகின்றது. விஜயாலய சோழனால்
உதயமான இப்பேரரசு, மூன்றாம் இராஜந்திர சோழனின்
ஆட்சியுடன் முடிவுற்றது. பல்லவர்களின் வலிமை குன்றியதால்
ஏற்றம் பெற்ற பிற்காலச் சோழர் ஆட்சி, பிற்காலப் பாண்டியர்
எழுச்சியால் இறுதிடைந்தது. பிற்காலச் சோழப் பேரரசர்களான
முதலாம் இராஜராஜன், இராஜேந்திரன் போன்றவர்கள் காலத்தில்
வட புலத்திலும், கடல் கடந்த நாடுகளிலும் திறைபெறும்
அளவு அவர்கள் வலிமை மிகுந்தது. ஆட்சித்திறத்தாலும், பிற
வகையான     சாதனைகளாலும் பிற்காலச்     சோழர்களின்
ஆட்சிக்காலம் தமிழக     வரலாற்றில் பொற்காலமாகவே
போற்றப் பெறுகின்றது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)