
2 சமணத் தமிழ்க் காப்பியங்கள்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
சமணத்
தமிழ்க் காப்பியங்கள் எவையெவை என்பதை
இப்பாடம் சுட்டிக் காட்டுகிறது.
ஐம்பெருங்காப்பியங்களுள்
சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி,
வளையாபதி ஆகியவையும்
பெருங்கதை என்ற
கொங்குவேள் மாக்கதையும் சமணசமயக் கோட்பாடுகளை
உணர்த்தும் விதங்களைக்
குறிப்பிடுகிறது.
சமணம்
மேற்கூறிய காப்பியங்களைத் தந்ததின் வாயிலாகத்
தமிழ்மொழி வளமடைந்த
தன்மையும் சமணச் சான்றோர்
சில இலக்கிய வகைகளுக்கு முன்னோடிகளாய் அமைந்து
பாதையமைத்துத்
தந்தமையும் விரித்துரைக்கப்படுகிறது.
ஐஞ்சிறு
காப்பியங்கள் அனைத்தையும் சமணரே தந்தார்கள்.
ஆயினும் சில முழுமையாகக்
கிடைக்கப் பெறவில்லை என்ற
செய்தியும் சொல்லப்படுகிறது.
சமணக்
காப்பியங்கள் அனைத்திலும் நிலையாமைக் கோட்
பாடும், அறமே விழுத்துணையாவதால்
அதை இடையறாது
செய்ய வேண்டும் என்ற கருத்தும், எல்லாவற்றுக்கும்
மேலாகக் கொல்லாமைக்
கோட்பாடும் அழுத்தமாகக் கூறப்
படுகின்றன.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இப்பாடத்தைப்
படித்து இதில் உள்ள கற்றல் செய்கைகளை
முழுமையாகச் செய்வீர்களானால்
கீழ்க்காணும் திறன்களையும்
பயன்களையும் பெறுவீர்கள்:

Tags :
CONTACT INFO
தமிழ் இணையக் கல்விக்கழகம்
அண்ணா பல்கலைக்கழக வளாகம்
காந்தி மண்டபச் சாலை
கோட்டூர்
சென்னை – 600 025.
தொலைபேசி : 91-44-2220 9400
இயக்குநர் : 91-44-2230 1017
நிகரி : 91-44-2220 9405
மின் அஞ்சல் : tva[at]tn[dot]gov[dot]in
ABOUT WEBSITE
USEFUL LINKS
VISITORS MAP
பதிப்புரிமை @ 2017, தமிழ் இணையக் கல்விக்கழகம்
www.tamilvu.org பயன்படுத்தி, நீங்கள் உங்கள் சாதனத்தின் குக்கீகளை வைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். விவரங்களுக்கு எங்கள் தனியுரிமை மற்றும் கொள்கைகள் பார்க்கவும்.