Primary tabs
-
5.6 தொகுப்புரை
- நாட்டுப்புறவியல் ஆய்வாளர் தனது ஆய்விற்கான
தரவுகளைத் தகவலாளியிடமிருந்து பெறுவதற்குத் தாமே
நேரடியாகக் களத்திற்குச் சென்று சேகரிக்கின்றார்.
- களத்தினைத் தேர்ந்தெடுத்தல், உதவியாளரைத்
தேர்ந்தெடுத்தல்,களத்திற்குச் செல்வதற்கு முன்-பின் தான்
கவனிக்க வேண்டியவை இவற்றை ஆய்வாளர் முன்
கூட்டியே சரியாகத் திட்டமிட்டுக் கொள்கிறார்.
- ஆய்வாளர் தரவுகளைச் சேகரிக்கக்
கையாளும்
அணுகுமுறைத் திறன் முக்கியமானது. அதற்காகப்
பயன்படும் தொழில்நுட்பக் கருவிகளும், அவற்றின்
பயனும் சொல்லப்பட்டுள்ளது.
- கள ஆய்வினைத் திட்டமிட்டுத்
தெளிவோடு
நிறைவேற்றினால், ஆய்வாளர் தனது ஆய்வுப்
பணியைச் சிறப்பாகச் செய்ய முடியும். இவ்வாறு கள
ஆய்வு குறித்தும் தரவுகளின் சேகரிப்புக் குறித்தும்
அறிந்து கொண்டு படிக்கத் தொடங்குங்கள்!
- நாட்டுப்புறவியல் ஆய்வாளர் தனது ஆய்விற்கான