Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் : II
4.விளிவேற்றுமை அடையும் மாறுதல்களை எழுதுக.பெயர்ச்சொற்கள் விளிஏற்கும்பொழுது சில மாறுதல்கள் ஏற்படும். அவை ஈறுதிரிதலும் (இறுதி எழுத்து மாறுதல்), ஈறுகுன்றலும் (இறுதி எழுத்து குறைதல்), ஈறு மிகுதலும் (இறுதி எழுத்து வேறு ஒன்று மிகுதல்), இயல்பாக வருதலும் (மாறுதல் இன்றி இருத்தல்) ஈற்று அயல் எழுத்துத் திரிதலும் (இறுதி எழுத்துக்கு முன் எழுத்து மாறுதல்) ஆகும்.
எ.டு
தங்கை- தங்காய் !- ஈறுதிரிந்து வந்ததுநண்பன்- நண்ப!- ஈறுகுறைந்ததுமகன்- மகனே !- ஈறுமிகுந்ததுதோழி- தோழி !- இயல்பாக வந்ததுமக்கள்- மக்காள்!- ஈற்றயல் எழுத்துத் திரிந்தது