Primary tabs
நிலைமொழிவரு மொழிகளுள் யாங்காயினும்
ஓரெழுத்திற்குத் திரிபுகூறி அம்மொழிக்கு மீளத்
திரிபு கூறுங்கால், அத்திரிபுமொழியை
எடுத்துக்கூறாமல் அத்திரிந்த எழுத்து மொழியையே
எடுத்துக்கூறல்
ஓரீற்றெழுத்து பிறிதோரெழுத் தீறாகத் திரிந்து
அவ்வாறே நின்று புணருதல், ஈற்றிலன்றிப்
பிறவிடங்களில்
வேறோரெழுத்துப்பெற்றுப் பிறி தீறாகநின்று
புணருமெனக் கூறி, அத்திரிபீற்றிற்காயினும்,
அத்திரிபீற்றோடுபுணரும் வருமொழிக்காயினும்,
மீளவும் ஒன்று விதிக்க வேண்டி அத்திரிபீற்றையே
எடுத்துப் புணர்த்துதல். அஃது இயல்பீறும்
பிறிதீறும் தோன்றநிற்றலின் அதுவும் பிறிது
மென்றலாயிற்று. இத்திரிபு பிறவிடங்களில்
வருமேனுங் கொள்க
மெய்பிறிதாதல், மிகுதல், குன்றல்