தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சிறப்புப்பாயிரம்

xv

சிறப்புப்பாயிரம்

_____

“உயிரிளங்குமரன்” நாடக நூலாசிரியரும்,
கலாவிற்பன்னரும், கவிஞருமாகிய

நவாலியூர், ஸ்ரீமாந் க. சோமசுந்தரப் புலவரவர்கள்

இயற்றியது.

ஆசிரியப்பா

 
விண்டொடு நெடுவரை மந்தரந் நிறுவி
அண்டரும் பிறரும் பண்டைநாட் கடையப்
புண்ணியப் பாற்கட லீன்ற தண்ணிய
விண்ணவ ரமுதம் வெள்கி வாயூற
5
நூற்பய னாகிய நாற்பய னுடனே
நாச்சுவை யென்றா செவிச்சுவை யென்றா
மேற்படு மொன்பது விதச்சுவை யென்றா
பல்வகைச் சுவையு மெல்லவர் தமக்கும்
உண்டிட வுதவுந் தண்டா வமுதருள்
10
செந்தமிழ்த் தெய்வத் திருமொழிக் கடறருஞ்
சந்தனப் பொதியத் தவமுனி தனாது
சுந்தரச் சேவடி தொழுதுகற் றுயர்ந்த
பல்காப் பியமுணர் தொல்காப் பியனருள்
ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியநூல்
15
எழுத்துஞ் சொல்லும் பொருளு மென்ன
வழுத்திய மூன்று வகுப்பிற் றாங்கதன்
எழுத்தும் சொல்லும் பழுத்தநூற் புலவர்
உரையுடன் வைத்துப் புரைதப வாய்ந்து
கற்போர் முட்டறப் பொற்புடன் வெளியிட்
20
டந்நா ளருளின னாங்கது போல
வன்னமும் பதமும் மாசறக் கற்ற
பின்னரா ராயும் பெரும்பொருள் கற்புழிக்
கொள்வோ ருள்ளமுங் கொடுப்போ ரறிவும்
ஒள்ளிய வுணர்வுபெற் றுவகை பூப்பக்
25
கண்ணிய வுரையொடு நுண்ணிதி னாய்ந்து

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-08-2017 15:43:00(இந்திய நேரம்)