Primary tabs
1உரிச்சொல்
(ஆ. சிவலிங்கனார்)
உரிச்சொல்லின் பொது இலக்கணம் :
உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை
இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றிப்
பெயரினும் வினையினும் மெய்தடு மாறி
ஒருசொற் பலபொருட் குரிமை தோன்றினும்
பலசொல் ஒருபொருட் குரிமை தோன்றினும்
பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித்
தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின்
எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்
என்பது உரிச்சொல் இயல்பு கூறும் தொல்காப்பிய உரியியற்
சூத்திரம். இதன்
கருத்து வருமாறு :
“உரிச்சொற்கள் என்பன இசை பண்பு குறிப்பு எனும் மூன்றனுள்
ஒன்றன் அடிப்படையில்
தோன்றும். பெயர்ச் சொல்லிலோ வினைச்
சொல்லிலோ அல்லது இரண்டிலுமோ தம்வடிவம்
திரிந்து வரும்;
அல்லது திரியாமல் பெயரையோ வினையையோ அடைமொழியாகச்
சார்ந்து வரும். ஒரு சொல் ஒரு பொருளுக்கோ பல பொருளுக்கோ
உரிமையாக வரும். பல
சொற்கள் ஒரு பொருளுக்கு உரிமையாக
வருவதும் உண்டு. வெளிப்படையிற் பொருள்
விளக்காமல் ஒரு
சொல்லுடன் பழகிய சொல்லுடன் சார்த்தப் பட்டே பொருளுணர
வரும்” என்பதாம். இச்சூத்திரப் பொருளைக் கொண்டு உரிச்சொல்
இலக்கணம் பற்றி
உரையாளர்களும், ஆய்வாளர்களும் தத்தம்
கருத்துக் கேற்றவாறு
மாறுபடுகின்றனர். அவர் தம் மாறுபாடுகளுள்
உரிச்சொற் பெயர்க் காரணம்
பற்றியும், உரிச்சொல் குறைச்சொல்
எனக் குறிக்கப்படுவது பற்றியும்,
உரிச்சொல் சொற்பிறப்புக்குரிய
வேர்ச்சொல்லாகுமா என்பது பற்றியும் ஆராய்வதே
இக்கட்டுரையின்
நோக்கமாம்.
1. தமிழ்க்கல்வி இயக்கக் கட்டுரைகள் (பக்கம் 215221)
உலகத்தமிழ்க்
கல்வி இயக்கம்
33, திருமலை நகர் இணைப்பு
பெருங்குடி, சென்னை 600 096