Primary tabs
xiv
மாகிய
சொற்களுக்கெல்லாம் பகுதியாகிய வேர்ச் சொற்கள்” என்பர்
வெள்ளை வாரணனார்.
(தொல்காப்பியம், பக்.66)
உரிச்சொல்லின் தோற்றம் இசை, குறிப்பு, பண்பு
என்னும்
மூன்றளவில்தான் அமையும் என்பதைத் தொல்காப்பியர் “இசையினும்
பண்பினும் குறிப்பினும் தோன்றி” என்பதால் தெளிவுபடுத்திவிட்டார்.
அன்றியும் பெயரினும் வினையினும் மெய் தடுமாறும் என்றும்
கூறினார். எனவே இசை பண்பு குறிப்பைவிட்டு வெளிப்படையில்
பொருள் தருவன
பெயரும் வினையும் என அறியலாம். அதனால்
பெயர்வினை வேறு உரிச்சொல்
வேறு என்பதும் புலப்படும்.
உரிச்சொல் என்பது தனிச்சொல்
என்பதால்தான் பெயரினும்
வினையினும் சார்த்தல்வேண்டிற்று.
‘பொன்னன்’ என்பது பொன்னையுடையவன் என்னும் பொருளில்
வரும்போது குறிப்பு
வினையாகும். அதன் பகுதி பொன் என்பது.
பொன் என்பதிலிருந்து பொன்னன்
என்பது உருப்பெற்றது. அதனால்
பொன் உரிச்சொல் ஆகுமா? அது பொருட் பெயர்ச் சொல்
அன்றோ?
அது இசை, பண்பு, குறிப்பு என்னும் மூன்றனுள் எதில் அடங்கும்?
7. பொருட்கு உரிமைப் படுத்தப்பட்ட சொல்
உரிச்சொல்லாம்
என்பதே நன்று என்னும் கொள்கைக்கு யான்தரும்
விளக்கம்
வருமாறு:
யாப்பிலக்கணத்தில் மாச்சீர், விளச்சீர்கள் ஆசிரியப்பாவிற்கும்
காய்ச்சீர்கள் வெண்பாவிற்கும், கனிச்சீர்கள் வஞ்சிப்பாவிற்கும்
உரிமைப் படுத்தப்பட்டு முறையே ஆசிரிய வுரிச்சீர், வெண்பாவுரிச்சீர்,
வஞ்சியுரிச்சீர் எனப்பட்டன. உரிமைப் படுத்தப்பட்ட சீர்
உரிச்சீராயிற்று.
அகப் பாடல்களில் திணையுணர்தற்கு முதற்
பொருள்,
கருப்பொருள், உரிப்பொருள் என மூன்றுள்ளன. முதலிரண்டும் திணை
மயங்கியும் வருவன. ஆனால் உரிப்பொருள் திணை மயங்குதல்
இல்லை. அதனால்
திணையுணர்தற்குப் பாடலின் கருத்துப் பொருளே
உரிமைப் படுத்தப்பட்டது.
அதனால் கருத்துப் பொருள் உரிப்
பொருள் எனப்பட்டது.
உரிச்சீர், உரிப்பொருள் போலவே உரிச்சொல் என்பதற்கும்
காரணம்
காணுதல் வேண்டும். பெயர்ச் சொல்லும், வினைச் சொல்லும்
தெளிவாகப் பொருள்
தருவனஉரிச்சொல் தெளிவாகப் பொருள்
தருவதில்லை. அதனால் அதனைப்
பொருளுக்கு உரியதாக்குதல்
வேண்டும். அதனைப் பெயரிலோ வினையிலோ
சார்த்திஅல்லது
பெயர் போலவோ வினை போலவோ திரித்துப் பொருளுக்கு
உரிமைப்படுத்தல் வேண்டும். அப்படி உரிமைப் படுத்தப்படும்
சொற்களே
உரிச்சொற்களாம். எனவே, “உரிச்