Primary tabs
இயக்குநர் - பொறுப்பு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை - 113
முன்னுரை
தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் கற்பியல் உரைவளம் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தொல்காப்பிய உரைவள வெளியீட்டுத்திட்டத்தின் வாயிலாக வெளிவரும் 22-வது நூலாகும்.
இதன்கண் இளம்பூரணர். நச்சினார்க்கினியர் உரைகள் தொகுக்கப் பெற்றுள்ளன. தொகுப்பாசிரியரின் குறிப்புகளும் அங்கங்கு இணைக்கப் பெற்றுள்ளன. சான்றுப்பாடல்களுக்குப் பெரும்பாலும் அடிக்குறிப்பில் பொருள் தரப்பெறுகின்றது. பாட வேறுபாடுகளும் பிற சில இலக்கணக் குறிப்புகளும் வெள்ளை வாரணனார் கருத்துகளும் தேர்ந்து சுட்டப்பெறுகின்றன. இறுதியில், இலக்குவனாரின் ஆங்கில மொழிபெயர்ப்பு இணைக்கப்படுகின்றது.
ஒவ்வொரு நூற்பாவையும் தொடர்ந்து பிற்கால இலக்கண நூல்களில் ஒத்த செய்தி காணப்படின் அவ்வாறே எடுத்து மொழியப்படுவது, ஒப்பீட்டுக் கல்விக்கு உதவுகின்றது.
இவ்வுரைவளத் தொகுப்பைப் பல ஆண்டுகட்கு முன்பே நிறைவாக்கிய அறிஞர் ஆ. சிவலிங்கனாரவர்கள் தமிழுலகின் பாராட்டுக்குரியவர்.
நூல் அச்சாகிய காலை, ‘பொருட்சுருக்கம்’
மற்றும் நூலின் முன்-பின் பகுதிகளை ஆக்கி
உதவிய நிறுவன
ஆய்வாளர் திரு. தி.மு. கந்தசாமி, எம்.ஏ.,எம்ஃபில்,
அவர்கட்கு நன்றி.