தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

vii

நுழைவாயில்!

முன்னுரை

“அல்லையாண் டமைந்த மேனி
      அழகனும் அவளும் துஞ்ச
வில்லையூன் றிய,கை யோடும
      வெய்துயிர்ப் போடும் வீரன்
கல்லையாண் டுயர்ந்த தோளாய்!
      கண்கள்நீர் சொரியக் கங்குல்
எல்லைகாண் பளவும் நின்றான்!
(கம்ப. குக. 42)

என்பது கம்பன் பாடல்!

இராமன் வனம் ஏகினான்; உண்மை உணர்ந்த பரதன், அவனுக்கு ஆட்சி நல்கிட, அவனிருக்கும் இடம்தேடிப் புறப்பட்டான்!குகனைக் கண்டான்! இராமனும் சீதையும், கல்லினையே தலையணையாகக் கொண்டு படுத்துறங்க, இலக்குவனோ, வில் ஏந்திய கையினனாய், வெய்துயிர்ப்போடு, கண்களில் நீர் தாரை தாரையாகச்சிந்த, அவர்கட்கு விலங்கு முதலாயவற்றால் எவ்வகைக் கேடும் நேராவண்ணம் கண் இமைக்காமல் விடிய விடியப் பாதுகாத்தான்!இவ் அரிய செய்தியைப் பரதனுக்குக் குகன் கூறியதாக அமைந்த பாடல் இது!

இக் கருத்தை உட்கொண்டு கவிஞர் கண்ணதாசன் பாடிய பாடல் ஒன்று :

“தமிழ்மகள் உறங்கத் தான்விழித் திருந்து
 இமையசை யாதொரு பகைஅணு காமல்
 காத்திருந் தான்!உயிர் காற்றொடும் போயது!
 காத்திருந் தான்!உயிர் காற்றொடும் போயது!”

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2017 15:03:40(இந்திய நேரம்)