தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


xLiii

என்றும் கூறுவர் (தமிழ் இலக்கிய வரலாறு 11 ஆம் நூ.ஆ.திரு.மு.அ; பக். 142, 149, 150)

ஆம்! ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ கூறுவது தொல்லாசிரியர் நெறி. பின்னாளில் இலக்கணத்திற்கு ஏற்ப இலக்கியம் படைக்கும் நிலை உருவாயிற்று. இலக்கியம் கிட்டாத இலக்கணத்தை வலியுறுத்த என் செய்வது? உரையாசிரியர் எடுத்துக் கொண்ட இலக்கணத்திற்கு ஏற்பத் தாமே இலக்கியம் படைத்துக் காட்டினார் என்று கோடல் பொருந்தும். ஆனால், அவற்றுள் அவர் செய்தவை எவை? அவர்க்கு முன்னிருந்தோர்க்கும் இதே இடர்ப்பாடு உண்டல்லவா? அவர் வழியாகக் கிடைத்த பாடல்கள் எவை? இவற்றைக் கண்டு தெளிவதென்பது தெளிவற்றதும் இடர்ப்பாடு மிக்கதும் ஆகிய பணியாகும்.

விருத்தியுரைகாரர் இலக்கணச் சான்றுக்கு ஆசிரியர் பெயரையோ, நூற்பெயரையோ இயன்ற அளவும் தவறாமல் குறித்துச் செல்லும் நெறியை மேற்கொண்டுள்ளார். ஆனால், இலக்கியச் சான்றுக்கு அந்நெறியை மேற்கொண்டாரல்லர். ஆதலால், அவர் நூற்பெயரையோ ஆசிரியர் பெயரையோ குறிப்பிடாதன வெல்லாம் அவரே இயற்றியனவாகக் கோடற்கு இல்லை. சான்றாக, ‘‘அணிமலர் அசோகின்’’ ‘‘பொன்னின் அன்ன’’ என்னும் இரண்டு பாடல்களும் விருத்தியுரையாசிரியர் செய்தனவாகலாம் என இலக்கிய வரலாறு கூறுகின்றது. ஆனால், அவை அவரால் செய்யப்பெற்றன அல்ல என்பதற்குச் சான்றுளது.

இவ்விரண்டு பாடல்களும் யாப்பருங்கலக் காரிகையிலும் எடுத்துக் காட்டாக வந்துள. அவற்றைக் காரிகை உரையாசிரியர் கட்டாயத்தால் காட்டுகின்றார் என்றே கொள்ள வேண்டும். ஏனெனில் அப்பாடலை, நூலியற்றிய அமித


1‘‘மோனை விகற்பம் ‘அணிமலர்’ மொய்த்துட னாமியைபிற்(கு) ஏனை எதுகைக்(கு) இனம் பொன்னின் அன்ன இனிமுரணிற்(கு) ஆன விகற்பமும் சீறடிப் பேர(து) அளபெடையின் தான விகற்பமும் தாட்டாஅ மரையென்ப தாழ்குழலே’’ என்பது தொடைவிகற்பங்களுக்கு அமிதசாகரர் காட்டும் உதாரண முதனினைப்புப் பாட்டு (காரிகை. 20)


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-08-2017 20:25:41(இந்திய நேரம்)