(இ) எடுத்துக்காட்டுச் செய்யுட்கள் :
இந்நூலில் அணிகளை விளக்கு முகமாகக் காட்டப்பட்ட
செய்யுட்கள் மூவகைத் திறந்தன. 1. சில செய்யுட்கள்
பிற இலக்கியங்களிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டன.
2. சில செய்யுட்கள் முதனூலின் மொழி பெயர்ப்பாக
அமைந்தன. 3. சில செய்யுட்கள் ஆசிரியர் தாமே
படைத்துக்கொண்டன. இவற்றுள் முன்னையதை மட்டும் வேறு
பிரித்தறிய முடிகின்றது. ஏனைய இரண்டனையும்
வேறுபடுத்திக்காண முதனூல் வல்லாரின் துணை
வேண்டியள்ளது.
தண்டியலங்காரத்தை இயற்றிய ஆசிரியர் பெயர், வரலாறு
முதலியன தக்கவாறு அறிதற் கியலாதிருக்கின்றது.
காவியாதர்சத்தை இயற்றிய ஆசிரியர் பெயர் தண்டியாதல்
போலவே, தமிழ்த் தண்டியலங்காரத்தை இயற்றிவரும் தண்டி
என்ற பெயரினரே என்பது சிலருடைய கொள்கையாகும்.
இதற்குப் பின்வரும் சிறப்புப் பாயிரச் செய்யுளைச்
சான்றாகக் காட்டுவார்.
'வடதிசை யிருந்து தென்மலைக் கேகி
மதிதவழ் குடுமிப் பொதிய மால்வரை
இருந்தவன் தன்பால் அருந்தமிழ் உணர்ந்த
பன்னிரு புலவரின் முன்னவன் பகர்ந்த
தொல்காப் பியநெறி பல்காப் பியத்தும்
அணிபெறு மிலக்கணம் அரிதினில் தெரிந்து
வடநூல் வழிமுறை மரபினின் வழா அது
ஈரிரன் டெல்லையின் இகவா மும்மைப்
பாரத விலக்கணம் பண்புறத் தமீஇத்
திருந்திய மணிமுடிச் செம்பியன் அவையத்து
அரும்பொருள் யாப்பி னமைவுற வகுத்தனன்
ஆடக மன்றத்து நாடக நவிற்றும்
வடநூ லுணர்ந்த தமிழ்நூற் புலவன்
பூவிரி தண்பொழிற் காவிரி நாட்டு
வம்பவிழ் தெரியல் அம்பி காபதி
மேவருந் தவத்தினிற் பயந்த
தாவருஞ் சீர்த்தித் தண்டியென்
பவனே.'
இதலிருந்து நூலாசிரியர் பெயர் தண்டி யென்பதும்,
அவர் அம்பிகாபதியின் புதல்வர் என்பதனால் கம்பரின்
பெயரர் என்பதும்,