தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

xiv

நன்னூல் மூலமும் மயிலைநாதருரையும்
 
 

127, 130, 149, 263, 319, 359, 369-ஆம் சூத்திரவுரைகளாலும், அகத்தியத்தையும் அவிநயத்தையும் பின்பற்றினமை நுண்பொருண்மாலையுடையார் 571-ஆம் திருக்குறட் குறிப்பில், ( ‘‘பரிபாட்டினுள், நிவந்தோங்குயர்கொடிக்கும் இவ்வாறுரைத்தாராதலால், ‘ஒருபொருட் பன்மொழி சிறப்பினின் வழாஅ’ என்னுஞ் சூத்திரம் நன்னூலில் வருதலால், அகத்தியமாதல், அவிநயமாதலாக வேண்டுமென்க’’ என்று எழுதியிருத்தலானும்( ஆல், ஆன் என்பவற்றையும் மூன்றனுருபாகக் கூறியிருத்தலாலும் விளங்கும்.

திருவாரூரிற் றிருக்கூட்டத்திற் றமிழ்க்கிலக்காகிய வைத்திய நாதநாவலர் தாமியற்றிய இலக்கணவிளக்கத்தில் இந்நூலி லிருந்து ஏறக்குறைய இருநூற்றைம்பது சூத்திரங்களையெடுத்து அமைத்திருத்தலை உற்றுநோக்கும்பொழுது, பழைய நூல்களிலிருந்து பொருள்களைத் தொகுத்தல் முதலியவற்றிலும் சில்வகை யெழுத் திற்பல்வகைப் பொருளைச் செவ்வனாடியிற் செறித்தினிது விளக்கித் திட்பநுட்பம் பொருந்தச் சூத்திரஞ் செய்தலிலும் இவர் வல்லுநரென்பது புலப்படும்.

கி. பி. 1178 முதல் 1216-ஆம் வருடம் வரையில் அரசு புரிந்த மூன்றாம் குலோத்துங்கசோழன் காலத்தவனான மேற்கூறிய சீயகங்கன்காலத்தில் இருந்தவராகத் தெரிதலால், இவருடைய காலமும் அதுவேயெனக் கொள்ளவேண்டும்; ‘‘பிங்கல முதலா, நல்லோ ருரிச்சொலி னயந்தனர் கொளலே’’ (459) என்பது இந்நூற் சூத்திரமாதலால், பிங்கல நூலாசிரியர்காலத்திற்கு இவர் காலம் பிற்பட்டதென்று தெரிகின்றது; ‘பைங்கண், பைந்தார், காரா, சேதா என்றாற்போலும் பண்புத்தொகையாகிய சொற்களைப் பசுமை, கருமை, செம்மையெனப் பண்புப்பெயராக நிறுத்தி, ஈற்றுயிர் மெய்யும் ஈற்றயலுயிருங்கெட்டு வருமொழிக்


* ‘‘அம்மு னிகர மாய்த மென்றிவை யெய்தின்’’ என்னும் பாடபேதம் இங்கே கொள்ளற்பாலது; ‘‘ஆய்தமும் யவ்வு மவ்வொடு வரினே, ஐயெனெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்’’ என்பது அவிநயம் (யா. வி. எழுத்தோத்து, சூ. 2 - உரை, மேற்.)      ( செந்தமிழ், எ - ஆம் தொகுதி, பக். 526.      ( இந்நூல், 296-ஆம் சூத்திரவுரையைப் பார்க்க; ஆல், ஆன் என்பன அகத்தியத்திலன்றி அவிநயத்திலும் மூன்றாம் வேற்றுமையுருபுகளாகக் கூறப்பெற்றுள்ளன; ‘‘ஆலு மானு மூன்றனுருபே என்றாரவிநயனார்’’ என்பது, வீரசோழியம், வேற்றுமைப்படலம், 6-ஆம் கலித்துறை உரையிலுள்ள மேற்கோள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 24-05-2018 17:31:37(இந்திய நேரம்)