Primary tabs
மூலத்தையும் உரையையும் பதிப்பித்த அன்புக்குரிய தாமோதரன் அவர்கள் பெரிதும்
பாராட்டுக்குரியவர். பதிப்பினை மிக நேர்த்தியாக வெளிக்கொணர்ந்த உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனமும் பாராட்டுக்குரியது. இந்த வகையில் தாமோதரன் மிக
விரிவான பதிப்புரை ஒன்றை எழுதியுள்ளார். அதுவே ஒரு தனி நூலாகுமளவுக்குச்
சிறப்புடையதாக அமைகின்றது.
நன்னூல் எளிமையும் தெளிவும் கொண்ட நல்ல
இலக்கணம்; செறிவும் சுருக்கமும்
வாய்க்கப் பெற்றது. சொல்லில் நயம், பொருளில்
வளம், முறையில் ஒழுங்கு, அமைப்பில்
அழகு, நடையில் எளிமை முதலிய சிறப்பியல்புகள்
எல்லாம் ஒருங்கே அமையப்பெற்ற
புதுநூல். அதிகாரம், இயல், சூத்திரம்
ஆகியவற்றின் தொகையிலும் நூற்பாக்களின்
அடியளவிலும் தொல்காப்பியத்தை விட நன்னூல்
மிகவும் சுருங்கியது.
மயிலைநாதர் செய்த நன்னூலுரை சிறப்பாக இல்லை
என்பதனால்தான் சங்கர
நமச்சிவாயர் இதற்கு உரை காணத் தொடங்கினார்
என்பது குறிப்பாகும். 17ஆம்
நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்கர நமச்சிவாயர்
உரையே நன்னூலுக்கு எழுதிய
உரைகளில் சிறந்ததாகுமென ஆசிரியர்
வலியுறுத்திக் கூறுகிறார். “சங்கர
நமச்சிவாயர்
உரையே நன்னூலுக்கு எழுந்த உரைகளுள் சிறந்தது
என்பதில் இருவேறு கருத்துகளுக்கு
இடம் இல்லை. அவர் உரை மூலநூலின் உட்பொருளை
முழுமையாக விளக்கத்தக்கது;
அழகான உரைநடையில் அமைந்தது; தெளிவான
பொழிப்புரை, கருத்தாழம் மிக்க
நயவுரைப் பகுதிகள், பொருத்தமான உதாரணப்
பாடல்கள், தருக்கநெறி தவறாத வினா
விடைகள், மனதில் நிற்கும் உவமைகள், மாற்றார்
மதிக்கும் மதிப்புரைகள் முதலிய
விருத்தியுரைப் பண்புகளைக் கொண்ட பேருரை.
எனவே, அவருடைய உரையைத்
தமிழுலகு இருகை ஏந்தி ஏற்றுக்கொண்டது; தமிழ்
மாணவர்கள் விரும்பிக் கற்றனர்.
சிவஞான முனிவரைப் போன்ற ஆசிரியர்கள் அவர்
உரையைக் கற்பித்துச் சுவை
கண்டனர்; பயன் கொண்டனர்.”
மேலும், இலக்கண இலக்கிய நூற்பயிற்சி ஒரு நல்ல
உரையாசிரியரின்
அடிப்படைத் தகுதி. அதனோடு உதாரணமும் ஆசிரிய
வசனமும் உரையின் இரு
கண்கள் ஆகும். இப்படிப்பட்ட சங்கர
நமச்சிவாயரையே சிவஞான முனிவர் குறை
கண்டார். சங்கர நமச்சிவாயரிடம் தமிழ்
நூற்பயிற்சி மட்டுமே இருந்தது என்பது
அவர்
கருத்து. என்னைக் கேட்டால் வடநூல் உணர்ந்தால்