Primary tabs
xxi
பின், போலியைப் பற்றிக் கூறுமிடத்துச் ‘சில எழுத்துக்கள் கூடிச் சில எழுத்தக்கள்போல இசைக்கும்; அவற்றைக் கொள்ளற்க’ என்ற நச்சினார்கினியர் கருத்தை அடியொற்றி, நன்னூல் நூற்பாவோடு தொல்காப்பிய நூற்பா ஒன்றனையும் இணைத்து நுவல்கிறார்.
உயிரும் உயிர்மெய்யும் எழுத்துச்சாரியை பெற்றும் பெறாதும் வரும் வழக்ககாற்றை உட்கொண்டு, சாரியைப் பேறு எழுத்திற்கு ஒருதலையன்றாதலின், மெய்க்கு அகரச்சாரியை குறிப்பிட்ட நன்னூலார் கருத்தை ஏலாது, தொல்காப்பியனார் நுவன்றவாறே ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும்’ என்று மெய்யொலியின் சிறப்பு நிலையை எடுத்தியம்பிப் பின், நன்னூலார் கூறியாங்கு எழுத்துச் சாரியைகளை விளக்குகிறார். நன்னூலார் குறிப்பிடாத சில வேற்றுச் சாரியைகளையும் எடுத்தியம்பி, சாரியைபெற்றே வரல்வேண்டும் என்ற வரையறை தனிமெய் அல்லனவற்றிற்கு இன்று என்பதையும் உரையில் விளக்கி எழுத்தியலைத் தலைக் கட்டுகிறார்.