Primary tabs
xxv
தாமும் கூறாது, தொல்காப்பியனார் வடசொல்பற்றிய செய்திகளை இயைபுபற்றி எச்சவியலில் கூறியமை போலவே, தாமும் செய்யுட் சொற்களைக் குறிப்பிடும் பெயரியலில், ஆரியமொழிச் சொற்களில் பெயர்களே தமிழ் இலக்கியங்களில் தொடைநயம், ஓசைநயம் கருதி ஏற்றபெற்றி கொள்ளப்படுமாதலின் இயைபுபற்றி ஆரியமொழிச்சொற்கள் தமிழில் வடமொழியாக அமைந்து பயன்படுதற்கண் ஏற்படும் மாறுதல்களை யெல்லாம், தொல்காப்பியனார் காலத்தில் தமிழில் சிவணிய வடசொற்கள் சிலவே யாதலின் அவர் கருத்துப்படி நுவலாது, வடமொழிச் சொற்கள் தமிழில் பலவாறு கலந்த இடைக்காலத்துத் தோன்றிய நன்னூலார்யாத்த நூற்பாக்களை அடியொற்றியே, பின் பெயரியலில் விளக்குவான் வைத்துக் கொள்கிறார்.