Primary tabs
நன்னூல் நூற்பாக்கள்
நையு மௌவு முதலற் றாகும்.
டெய்து மெகர வொகரமெய் புள்ளி.
மேவு மிசைவிளி பண்டமாற் றாதியின்.
சாயு முகரநா லாறும் ஈறே.
மெய்யொ டேலாதொந் நவ்வொ டாமௌக்
ககர வகரமோ டாகு மென்ப.
ஈரொற் றாம்ரழத் தனிக்குறி லணையா.
யெய்தி னையொத் திசைக்கு மவ்வோ
டுவ்வும் வவ்வு மௌவோ ரன்ன.
மைம்பா னிகழ்பொழு தறைவினை யிடைநிலை.
திசைவினை யிடைநிலை யாமிவை சிலசில.
தம்மொடும் பிறவொடு மல்வழி வேற்றுமைப்
பொருளிற் பொருந்துழி நிலைவரு மொழிகள்
இயல்பொடு விகாரத் தியைவது புணர்ப்பே.