Primary tabs
LXX
உயிர் பன்னிரண்டும், கதநபம என்பனவற்றொடு சவஞய
என்பனவாகிய ஒன்பது மெய்யொடு சேர்ந்த உயிராலாகிய
உயிர்மெய்யும் மொழிக்கு முதலாம் என்பது.
26
ஐ ஒள அல்லனவற்றோடு சகரமும், உஊ ஒஓ அல்லனவற்றோடு
வகரமும், ஆ எ ஒ என்பனவற்றோடு ஞகரமும்,
ஆகாரத்தொடு யகரமும் சேர்வதனாலேற்படும்
உயிர்மெய்களே மொழிக்கு முதலாம் என்பது.
27
உயிர் பன்னிரண்டும் ஙகரம் ஒழிந்த மெல்லின மெய்
ஐந்தும், இடையினமெய் ஆறும், குற்றியலுகரமும்
மொழிக்கு ஈறாம் என்பது.
28
குற்றுயிர் ஐந்தும் அளபெடைக்கண் ஈறாம்
என்பதும், எகரம் அளபெடைக்கண் அன்றி ஈறாகாது
என்பதும், ஒகரம் நகரத்தொடும் ஒளகாரம் ககர
வகரங்களொடும் ஈறாம் என்பதும்.
29
னகர ஈற்று அஃறிணைப்பெயர்கள் சில மகர ஈற்றொடு
மயங்கிவரும் என்பது.
30
கசதப என்ற நான்கும் தம்மொடு தாமே மயங்கும்
உடனிலை மெய்மயக்கமும், ரழ என்ற இரண்டும்
தம்மொடு பிறவேமயங்கும் வேற்றுநிலை மெய்
மயக்கமும், ஏனைய பன்னிரண்டும் தம்மொடு தாமும்
தம்மொடு பிறவும் மயங்கும் இருவகை மயக்கமும்,
எண்ணில் அடங்காதனவாகிய உயிர்மெய் மயக்கமும்
என்பன.
31
ஙம்முன் கவ்வும், வம்முன் யவ்வும், ஞம்முன் சயவும், நம்முன் தயவும், டறமுன் கசபவும், ணம்முன் க ச ஞ ட ப ம ய வ வ்வும், னம்முன் க ச ஞ