Primary tabs
மெய்யீற்றுப் புணரியல்
ணகர னகர ஈறு :
இவை வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வருமொழி முதலில்
வன்கணம்வரின் முறையே டகரமாகவும் றகரமாகவும்
திரிந்தும், ஏனைக்கணம்வரின் இயல்பாகவும்,
அல்வழிக்கண் நாற்கணம்வரினும் இயல்பாகவும்
புணரும் என்பது.
119
தனிக்குற்றெழுத்தைச் சாராது மொழி இறுதியில்
வரும் ணகரமும் னகரமும், வருமொழி முதற் கண்
வரும் நகரம் ணகரமாகவும் னகரமாகவும் திரிந்த
விடத்துத் தாம்கெடும் என்பது.
120
ணகர ஈற்றுச் சாதிப்பெயர், குழூஉப்பெயர், பரண்
கவண் என்ற பெயர்கள் வருமொழியொடு இயல்பாகவே
புணரும் என்பதும், உணவுப் பொருளாகிய எண் என்ற
பெயரும் சாண் என்ற அளவுப் பெயரும் இருவழியும்
டகரமாய்த் திரிந்து முடியும் என்பதும்.
121
னகர ஈற்றுக்கிளைப்பெயர்
வேற்றுமைப்புணர்ச்சிக்கண் இயல்பாகவும்,
அகரச்சாரியை பெற்றும் புணரும் என்பது.
122
மீன் என்ற பெயர் வேற்றுமைப் புணர்ச்சிக்கண்
இயல்பாகவும், னகரம் றகரமாகதி திரிந்தும்
புணரும் இருநிலையும் உடையது என்பது.
123
தேன் என்ற சொல் வேற்றுமைப்புணர்ச்சிக்கண் வன்கணம்வரின் இயல்பாகவும் திரிந்தும் ஈறு கெட்டு வலி மெலி மிகுந்தும், மெல்லெழுத்து வரு மொழி முதற்கண்வரின் ஈறுகெட்டும் கெடாமலும் உறழ்ந்தும், இடையெழுத்து வருமொழி முதற்கண்