தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வ   
வகுளம்
-
மகிழமரம்
வசந்தன்
-
மன்மதன் 
வஞ்சி
-
கொடி
வடமீன்
-
அருந்ததி  
வடவரை
-
மேரு
வடி
-
மாவடு, கூர்மையான
வடு
-
குற்றம், மாவடு 
வட்கார்
-
பகைவர்  
வட்குதல்
-
நாணுதல்  
வட்டித்தல்
-
சுழலுதல்
வணங்குதல்
-
வளைதல்
வண்டல்
-
சிறுமியரது விளையாட்டு
வண்டல்தைஇ
-
விளையாட்டயர்ந்து
வண்டு
-
சங்கு
வந்தீம்
-
வம்மின்
வம்பலர்
-
புதியர்
வம்பு
-
புதுமை, கச்சு,
வம்பே
-
வீணை
வய
-
வலிமை
வயமா
-
புலி முதலிய கொடிய விலங்கு
வயிர்
-
ஊது கொம்பு
வரதம்
-
பெருமை
வரன்றல்
-
கொழித்தல்
வரிவயம்
-
புலி
வருகு
-
வருவேன்
வருக்கை
-
பலாவிசேடம்
வருட்டுதல்
-
அமைதியுறு வித்தல்
வரை
-
மலை, மூங்கில்
வரைதல்
-
மணத்தல், நீக்குதல், பேணுதல்
வலக்காரம்
-
விரகு
வலவன்
-
தேர்ப்பாகன்
வலித்தல்
-
உளம் துணிதல்
வல்
-
சூதடு கருவி
வல்சி
-
உணவு
வல்லி
-
கொடி
வல்லேறு
-
கடுங்குரல்இடி 
வல்லை
-
விரைவாக 
வளை
-
சங்கு  
வள்பு
-
வார் 
வள்ளம்
-
கிண்ணம்
வழங்குநர்
-
செல்லுவோர் 
வழை
-
சுரபுன்னை 
வறுங்கை
-
வறிதானமை 
வனசம்
-
தாமரை 
வன்கண்மை
-
கொடுமை
வன்புறை
-
வற்புறுத்துதல்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 01:17:26(இந்திய நேரம்)