Primary tabs
ix
இலக்கணமும் சொற்களின் பல்வேறு வகைப் பாகுபாடும், வேற்றுமையின் வகையும் விரியும் பெயர் மரபு உணர்த்துகிறது. வினையின் பொது விளக்கமும், வினைப்பாகுபாடும் கூறி வினைமுற்று விகுதிகளையும், எச்சங்களையும் வினை மரபு விளக்குகின்றது. இடைச்சொல்லின் இலக்கணம், சில இடைச்சொற்களின் பொருள்கள், உரிச்சொல்லின் இலக்கணம், வழு வழு அமைதி, பொருள்கோள்கள் ஆகியவற்றை எச்சமரபு உணர்த்துகிறது.
அகத்திணைமரபு, கைக்கோண்மரபு, புறத்திணைமரபு என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது பொருள் அதிகாரம்.
அகத்திணை வகைகள், அவற்றிற்குரிய முதல், கரு, உரிப் பொருள்கள், ஐந்திணையின் வகை, அவற்றின் விளக்கம் ஆகியவற்றை அகத்திணை மரபு பேசுகின்றது. களவியல், வரைவியல், கற்பியல் என்று மூன்றிற்குரிய கிளவிகளையும், அகப்பாட்டு உறுப்புக்களின் தொகை வகைகளையும் உணர்த்துகிறது கைக்கோண் மரபு. புறத்திணை ஏழையும், பொதுவியலையும் புறத்திணை மரபு பேசுகிறது.
யாப்பதிகாரம் உறுப்புமரபு, பாவினமரபு, பிரபந்தமரபு என்று மூன்று வகையாக உள்ளது. யாப்பு உறுப்புகளின் வகையும் அவற்றின் விரியும் உறுப்புமரபு உணர்த்துகின்றது. நான்கு வகைப் பாக்கள், அவற்றின் இனம் ஆகிய இரண்டையும் பாவினமரபு பேசுகிறது. செய்யுளின் வகையும் பிரபந்தங்களின் இலக்கணமும் பொருத்தத்தின் வகையும் அவற்றின் இலக்கணமும் பாகமும் உணர்த்துகின்றது பிரபந்த மரபு.
அணியதிகாரம் பொருளணிமரபு, சொல்லணிமரபு, அமைதிமரபு என்று மூன்று பிரிவுகளை உடையது. பொருளணி மரபு முப்பத்தொரு பொருளணிகளின் இலக்கணத்தை விளக்குகின்றது. சொல்லணி மரபு; மடக்கு அணியையும் இருபத்து மூன்று சித்திர கவிகளையும் உணர்த்துகின்றது. அமைதி மரபு வழு அமைதியை விளக்குகின்றது.