தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Swaminatham


xv

அந்த விதியை மேற்கொள்வதில் தவறில்லை என்று கொண்டு வெற்று விதியை எங்கெங்கு அமைக்கலாம் என்பதைப்பற்றியும் அமைக்கும் முறை பற்றியும் விரிவாக ஆராயத்தலைப்பட்டுள்ளனர். இம்முறை தொல்காப்பியரே கையாண்டுள்ளார் என்ற செய்தி நமக்கு வியப்பையும் பெருமிதத்தையும் தருகின்றது. (செ. வை. சண்முகம். ‘தொல்காப்பியரின் சில இலக்கண உத்திகள்’)

இம்முறையில் பத்துவகை குற்றமும் பத்துவகை அழகும் புதிய கோணத்தில் விளக்கப்பட்டால்தான் இன்றைக்கும் தேவையான கருத்தாக அவை அமைய முடியும்.

ஆசிரியனின் இயல்பு, நுவலுந்திறம், கொள்வோன் கோடற்கூற்று முதலியன நம்முடைய மக்களின் கல்விபற்றி கோட்பாடு காட்டுவனவாக அமைந்துள்ளன. இன்றைய நிலையில் அவற்றைப்பற்றி கல்வியாளர்களே விவாதித்து முடிவு காணவேண்டும். கோட்பாட்டு நிலையில் தமிழர்களின் கல்விக் கொள்கையை இங்கேதான் நாம் சந்திக்கிறோம்.

சிறப்புப்பாயிரம் என்பது நூல் பற்றிய செய்திகளே கொண்டுள்ளது. இது Biographical and bibliographical information என்று கொடுப்பது போன்று உள்ளது. இன்றைய நூலின் மேலட்டையும் முன்னுரையும் தரக்கூடிய செய்திகளை அக்காலத்தில் சிறப்புப்பாயிரமாகக் கருதிக் கூறப்பட்டுள்ளது என்று நாம் கொள்ளலாம். இங்கும் இன்றைய மரபுகளை ஆராய்ந்து சிறப்புப்பாயிரத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால் சிறப்புப்பாயிரத்தை நன்றாகப் புரிந்துகொள்ளவும் இன்றைய அறிவின் வளர்ச்சியாலும் சமூக மாற்றத்தாலும் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்து கொள்ளவும் முடியும்.

5. நூல் மதிப்பீடு

எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் தற்கால மொழியியல் அடிப்படையில் மதிப்பீட்டு ஆராய்ச்சிக்கு இங்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. முதலில் சுவாமிநாதம் தனக்கு


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 03:50:22(இந்திய நேரம்)