தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Swaminatham


xxii

சிவஞான முனிவர் நன்னூல் எழுத்ததிகாரப் பாகுபாட்டை மறைமுகமாக இலக்கண விளக்கச் சூறாவளியில் மறுத்துள்ளார்.

எழுத்ததிகாரப் பாகுபாட்டு முறையான எண், பெயர்’ முறை, பிறப்பு....என்று தொடங்குவது பொருந்தாது என்று சுட்டிக் காட்டியுள்ளார். ‘எண்ணுதற்கும் பெயர் கருவியாகலின் அதனை முற்கூறாதது முறையன்று’ என்று இலக்கண விளக்கச் சுறாவளியில் (பக். 65) கூறியுள்ளதை மனதில் கொண்டே சாமிகவிராயர் பெயர், எண், முறை, பிறப்பு என்ற நன்னூலார் பகுப்பை முறையை மாற்றி கூறியுள்ளார்.

நன்னூல் ஒரே இடத்தில் கூறிய செய்தியைச் சாமிகவிராயர் பிரித்து ஆங்காங்கே பேசியுள்ளார்.

 
எல்லையின்னும் அதுவும் பெயர் கொளும்
அல்லவினைகொளு நான்கு ஏழ் இருமையும்
புல்லும் பெரும்பாலும் என்மனார் புலவர் (318)
என்று வேற்றுமைகள் கொண்டு முடியும் சொல்லைத் தொகுத்து நன்னூலார் சொல்லியிருக்க சாமி கவிராயர்
 
இரண்டன் உருபு.........................
..................ஏற்கும் வினைக்குறிப்பான் முற்று
மூன்று உருபு.............ஏற்கும் வினை, பேர் பயநிலையும் நான்கு.......
...........வினையும் சிலபெயரும் முடிபு கூறிடுமே.

என்பன போன்று ஒவ்வொறு வேற்றுமையையும் அது கொண்டு முடியும் சொல்லையும் பிரித்து ஆங்காங்கே பேசுதலைக் காணலாம்.

நன்னூலிற்கும், சுவாமிநாதத்திற்கும் உரிய ஒப்புமைப் பகுதிகள்:

 
நன்.261
’’267, 268, 269
’’270, 271, 272
--
--
--
சுவாமி. 34.3
’’36
’’37
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 03:51:20(இந்திய நேரம்)