தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Swaminatham


xxx

புணர்ச்சியை வகைப்படுத்துவதில் ஒரு புதிய முறையைக் கையாண்டார். புணர்ச்சி விகாரம், புணர்ச்சியல் விகாரம் (இ. கொ. 111; சுவாமி. 27) என்று இருவகைப்படுத்தி புணர்ச்சியில் விகாரத்தைத் ‘தோன்றல், திரிதல், கெடுதல், நிலைமாறுதல்’ என்று நான்கு வகைப்படுத்தியது (இ. கொ. 113, சுவாமி. 28) என்ற இரண்டு கருத்தையும் சுவாமிநாதம்  தழுவிக் கொண்டுவிட்டது. அவ்வாறே வேற்றுமை பற்றிப் பேசும்போது ‘உருபு ஏற்பது, உருபு, பயன் மூன்றே’ (சுவாமி 40.3) என்ற சுவாமிநாதத்தின் கருத்து

 

 
உருபு ஏற்றதனையும் உருபையும் உருபு

நோக்கி வந்ததனையும் வேற்றுமை யென்பர் (இ. கொ. 20) என்ற இலக்கணக் கொத்தின் எதிரொலியே.

இலக்கணக் கொத்து வேற்றுமையை விளக்கக் கையாண்ட முறையைச் சுவாமிநாதம் அவ்வாறே ஏற்றுக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வேற்றுமைக்கும் அதற்குரிய சிறப்பு உருபு, பிற உருபுகள், சொல்லுருபுகள் என்று மூவகைப்படுத்திப் பேசும் சுவாமிநாத மரபு, இலக்கணக்கொத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றியது.

‘சாற்று உருபு, வேறுருபு. சொல்லுருபாய்ப் பிறவே தாம்’ என்ற சுவாமிநாத வரிகளில் (41. 2)

 
உருபேவே றுருபு சொல்லுரு பென்ன 
வேற்றுமை யுருபு மூன்றென விளம்புவர் (இ. கொ. 16)

இலக்கணக் கொத்தின் சாயல் படிந்திருப்பதைக் காணலாம்.

இவ்வாறே வினையியல் கூறு முறையிலும் இலக்கணக் கொத்தின் செல்வாக்கு படிந்துள்ளது. வினையியல் முதல் இரண்டு சூத்திரங்களும் (47, 48) வினையியலின் இறுதிப் பகுதியும் (53. 4) இலக்கணக் கொத்தின் முழுமையான தழுவலே.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 03:52:28(இந்திய நேரம்)