தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

யணி, சிறப்புநிலையணி, முறையில் படர்ச்சியணி, ஒழித்துக் காட்டணி, கூட்டவணி, இன்பவணி, துன்பவணி, அகமலர்ச்சியணி, இகழ்ச்சியணி, வேண்டலணி, மறையணி, பொதுமை அணி, மறையாமையணி, உலக வழக்கு நவிற்சியணி, வல்லோர் நவிற்சியணி என்பன தண்டியலங்காரத்தில் காணப்படாத அணிகளாகும். தண்டியலங்கார ஆசிரியர் திரிபதிசயம் எனக் கூறியதை இவர் மயக்கவணி என்பர். அவர் தூரகாரிய ஏது என்பதை இவர் தொடர்பின்மை அணி என்பர். அவர் பரிவர்த்தனை என்பதை இவர் மாற்றுநிலையணி என்பர். அவர் சமாகித அணி என்பதை இவர் எளிதின் முடிபணி என்பர்.

செய்யுளணியியல்: இவ்வியலில் தொகைநிலை, குளகம், முத்தகம், தொடர்நிலை ஆகிய நால்வகைச் செய்யுள்களினியல்பும், வைதர்ப்பர் விரும்பும் பத்துவகை நெறிகளும், எண்வகைப் பொருள்கோள்கள தியல்பும், பிரிபொருட் சொற்றொடர் வழுவா மாறும் அஃது அமைதியாமாறும் கூறப்பெற்றுள்ளன.

ஆசிரியர்: இந்நூலாசிரியர் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த உறையூரில் வண்டிக்காரத தெருவில் இருந்தவர். முத்துவீர உபாத்தியாயர் என்னும் பெயரினர். கொல்லர் மரபினர். ஆதலின் கம்மாள வாத்தியார் என்றும் அழைக்கப்பட்டனர். இவர் தம் பெயரினாலேயே இந்நூலைச் செய்தனர். இதனை
 

 
‘‘முத்து வீரியம் எனத்தற்பெயர் நிறீஇ
வகுத்தனன் உறந்தை வாழிய
முத்து வீரமா முனிவன் என்பவனே,’’

‘‘முத்து விரியம் எனத்தற் பெயர்நிறீஇ
வகுத்தனன் உறந்தை அகத்தெழுந் தருளிய
முத்து வீரமா முனிவன் என்பவனே’’
 

எனவரும் சிறப்புப் பாயிரங்களால் அறியலாம். இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பழுதறக் கற்றவர். வடமொழியிலும் வல்லுநர். முத்துவீர உபாத்தியாயர் என்று வழங்குதற்கேற்ப இவர் பன்னருஞ் சிறப்பின் நல்லாசிரியராய் விளங்கினர். திருச்சியில் S.P.G. கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த அமிர்தம் பிள்ளை, மறைமலை அடிகளாரின் சமய ஆசிரியரான சோமசுந்தர நாயக்கர், உறையூர் பிச்சை இபுராகிம் புலவர் முதலியோர்க்குப் பேராசிரியராகத் திகழ்ந்தவர். இவர்தம் மாணவர் பரம்பரையைப் பின்வருமாறு வகைப்படுத்திக் கூறுவர்.1

------------------------------------
1. மயிலை சீனி வேங்கடசாமி-தமிழ் இலக்கிய வரலாறு. பக். 293.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 04:25:13(இந்திய நேரம்)