தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 
‘‘முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப்
பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி
அழியா மரபினது வழி நூ லாகும்’’
 

என்பதற்கேற்ப இவர் இந்நூலை யாத்துள்ள திறம் பாராட்டுதற்குரியதாகும். இவர் முன்னோர் மொழிபொருளே யன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றும் பெற்றியர். தொல்காப்பியத்திலிருந்து ஏறத்தாழ 100 நூற்பாக்களுக்கு மேலும், நன்னூலிலிருந்து ஏறத்தாழ 50 நூற்பாக்களுக்கு மேலும் மாற்றமின்றி எடுத்து மொழிந்துள்ளமை இதற்கரணாகும். இவர் இறுதிக் காலத்தில் சென்னையில் வாழ்ந்தவர் எனத் தெரிகிறது.

சமயம்: இவர் சைவ சமயத்தினர். இதனை இவ்வாசிரியர் ஐந்ததிகாரங்களிலும் நுதலிப்புகும் தற்சிறப்புப் பாயிரத்தால் அறியலாம்.
 

 

‘‘எப்பொருள் வயினுயி ரெதிர்ந்து மறைகுவ
தப்பொரு ளடிதொழு தறைகுவன் எழுத்தே’’

‘‘உருபமும் அருபமும் உருபரு பமுமுளன்
இலனெவ னவற்றெழு தியம்புவன் சொல்லே’’

‘‘மெய்ப்பொருள் பகாப்பொருள் வேத முதற்பொருள்
அப்பொரு ளகத்தணிந் தறைகுவன் பொருளே’’

‘‘எலாந்தா மாக விருக்கும் பொருளெது
அதனடி மலர் தொழு தறைகுவன் யாப்பே’’

‘‘சுத்தமெய்ஞ் ஞானச் சுடர்மணி விளக்கைச்
சித்தம திருத்திச் செப்புவ லணியே’’
 

இந்நூற்பாக்களால் உலகத்திற்கு அந்தத்தைச் செய்கின்றவனே ஆதியாவன் என்பதும், அப்பரம்பொருள் உயிர்களை ஆட்கொள்ளுதற்காக உருவத் திருமேனி, அருவத்திருமேனி, அருவுருவத் திருமேனி ஆகிய மூவடிவையும் கொள்ளும் என்பதும், அப்பொருளே வேத முதற்பொருள் ஆகுமென்பதும், எல்லாவற்றையும் விழுங்கி நிற்கும் தற்பரமாக விளங்குவதும் அதுவே என்பதும், அஃது ஆனா அறிவாய் அடியவரிடத்து அகலாது விளங்கும் என்பதும் பெறப்படுகின்றன. இவ்வுண்மைகள் சைவசித்தாந்தச் செந்நெறியை விளக்குவதாகும். அன்றியும் திருக்கோவையாரைப் பொருண்மையாகவும் முதன்மையாகவும் கொண்டு தம் அகப்பொருள் இலக்கணத்தைச் செய்திருப்பதும் இவ்வாசிரியர் சைவரே என்றற்குச் சான்றாகும்.

காலம்: திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் இயற்றிய அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழுக்கு


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 04:25:32(இந்திய நேரம்)