தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU-Library


பதிப்பு முன்னுரை
p10
பிறக்காமல் தையலர்பால் சந்து நடக்கக் கற்காமல் சனியான தமிழ் படித்துத் தொலைத்தோமேழு என ஏங்கியதும் உண்டு.
சமுதாயத்தில் தமிழறிந்து போற்றும் தலைமையில்லை; தரமான தமிழ்க் கல்விக்குத் தக்க மதிப்பில்லை. அப்போதும் சில சமயநிறுவனங்கள் சிறந்த தமிழ்ப்பணி யாற்றிவந்தன. ஆனால், பொதுவாக இலக்கியங்கள் என்னும் நினைவாலன்றிச் சமயச் சார்புடையனவாகவே பெரும்பாலும் அவை செயற்பட்டன. இது இயல்பானதே.
எனவேதான் தமிழ்ப்புலவன் அரசன், சிற்றரசன், பெரு நிலக்கிழார் என விளங்கிய செல்வர்களை அண்டி வாழவேண்டியவன் ஆனான். பெரும்பாலும் அவர்கள் எளியோரை வாட்டி, வலியோரை வாழ்த்தி, அதிகாரத்திற்கு அடிவருடி, விளம்பரத்திற்கு அறம்புரிந்து, பகட்டாக வாழ்பவர்களாகவும், தன்னை எப்போதும் நான்குபேர் புகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும் என ஆசைப்படுபவர்களாகவும் இருந்தனர். இவர்களைச் சார்ந்திருந்த புலமைக் கும்பலும் இத்தகையோரை எவ்வளவு உயர்த்திப் புகழமுடியுமோ அவ்வளவும் புகழ்ந்து பாடித்தீர்த்தது. உண்மைக்கும்இவர்கள் கூற்றுக்கும் சற்றும் தொடர்பே இருக்கவில்லை. அகப்பொருளின் ழுபொய் பாராட்டல்ழு என்னும் துறை இவர்களுக்கே மெய்யாகப் பொருந்தும். இது மட்டுமன்று. சமுதாயப் பொறுப்புணர்ச்சியோ கடமையோ இல்லாததால் இச்செல்வர்களில் பெரும்பாலோர் இன்பத் துறையில் மிக எளியராக இருந்தனர். இவர்களைப் பற்றிய இலக்கியமும் காமக் களஞ்சியமாக இருந்ததில் வியப்பேது?
இதனால்தான் இத்தகையவர்களைப் பாட்டுடைத் தலைவராகக்கொண்டு பாடிய புலவர்களைத் தரமிக்க பல சான்றோர் இகழ்ந்தனர். அவர்கள் இகழ்ந்ததற்குக் காரணம் மனிதனைப் பாடினர் என்பது அல்ல; பொய்யையும் இழிவையும் பாடினர் என்பதேயாகும். மனிதர்களைப் புகழ்ந்த சங்கப் புலவர்கள் எப்போதும் மதிக்கப்படுகின்றனர். மனிதர்களையே ஆசானாகவோ அடியாராகவோ போற்றிய சமயப் புலவர்களும் பெருமையாகப் பேசப்படுகின்றனர். ஆனால் ஊதியம்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 04:46:37(இந்திய நேரம்)