இலக்கணம் மற்றொரு வகையிலும் சிறப்புடையதாகத்
திகழ்கிறது. அனைத்துத் தமிழ் எழுத்துகளின்
வரிவடிவையும் இந்நூல் நன்கு விளக்குகிறது.
எழுத்துகளின் வரிவடிவை உணராதவர் ஒரு நூலையும்
படிக்க இயலாது. எனவே எழுத்தானியன்ற நூலில்
ழுஎழுத்துகளின் வரிவடிவைக் கூறுவதால்
பயனேதுமில்லைழு எனச் சிலர் கொன்னே மேம்போக்காகக்
கருதலாம். நூலாசிரியரும் இதனை அறியாதார் அல்லர்.
அதனால்தான்,
ழுஉருவும் ஓசையும் உணராற்கு ஒருநூற்
பயனும் எய்தாப் பண்புநன் குணர்ந்தும்
தொடங்கிய துறைக்காச் சொல்முறை முன்பின்
பிறழா வண்ணம் பேசுதும் பிரித்தேழு
(6)
என முதலில் தௌ¤வாக்கிவிட்டு எழுத்தின் வரிவடிவத்தை
விளக்கத் தொடங்குகிறார்.
இச்செயலை, ழுபுதுமையாகத் திகழ்வதுடன்,
எழுத்துவடிவக் காப்பாக என்றும் போற்றிக்கொள்ள
வாய்ப்பதுமாம் 1 ழு எனப் பாராட்டும்
அறிஞர் இளங்குமரன் அவர்கள், ழுஇம்முயற்சியில்
தொல்காப்பியர் ஊன்றியிருப்பின் வடிவம், அதன்
மாற்றம் பற்றிப் பலப்பலரும் பலப்பல பேசும் ஒருநிலை
தோன்றியிருக்கவே முடியாதுபோயிருக்கும் என்பது
தௌ¤வாம் 2 ழு என உணர்ச்சியோடு
அங்கலாய்க்கிறார்.
ஆனால் ஒருவகையில் இதுவும் இன்றியமையாமையின் விளைவே
எனலாம். பண்டைக் காலத்தில் நேராக எழுதுபவர்களும்
படிப்பவர்களும் குறைவு. அக்காலத்தில்
படித்தவர்களுக்குக் கூடச் சுவடி எழுதித்
தருவதற்கென்றே வேறு சிலர் இருந்தனர் என்பதைச்
சுவடியியலார் அறிவர். இப்போது கிடைக்கக் கூடிய
சுவடிகளில் தொன்மையானவை என மதிக்கப்பெறும் 17-ஆம்
நூற்றாண்டுச் சுவடிகளையே சிலர் எழுதப் பலர் படித்
இலக்கண வரலாறு - புலவர் இரா. இளங்குமரன்.
பக்.425