காப்பியத்தின் உரைநடைச் சுருக்கம் 1964-இல்
திருவாமாத்தூர்க் கௌமார சபையாரால் ழுதண்டபாணி
சுவாமிகள் வரலாறுழு என்ற பெயரில்
வெளியிடப்பட்டுள்ளது. இவ் வாசிரியரின் வாழ்க்கை
வரலாற்றை மேற்கண்ட நூல்களில் பரக்கக் காணலாமாதலின்
ஈண்டு அது விரிக்கப்பெறவில்லை.
இந் நூலுக்கு உரை காணுங்கால் இருந்த நிலையில்
ஆண்டுக் கூறப்பட்டதில் இன்று இரண்டு மாற்றங்கள்
ஏற்பட்டுள்ளன. அவற்றை ஈண்டுத் தெரிவிக்கும்
கடப்பாடுடையேன்.
முதலாவது 305-ஆம் பக்கத்தில் வருடப்பதிகம் பற்றிய
செய்தியில் அந்நூற்சுவடி திருவாமாத்தூர்க் கௌமார
மடாலயத்தில் இருப்பதாக எழுதினேன். இப்போது
அம்மடாலயத்திலிருந்த சுவடிகள் யாவும் சிறப்பாகப்
பாதுகாக்கப்படுவதற்காகவும் நல்ல பதிப்புகளாக
வெளியிடப்படுவதற்காகவும் கோவை சிரவையாதீனத்தில்
பேணப்பட்டு வருகின்றன. சுவடி எண் முதலியனவற்றில்
மாற்றமில்லை.
இரண்டாவது 317-ஆம் பக்கத்தில் வண்ணத்தியல்பு
நூலுக்கு இதுவரை உரை காணப்படவில்லை எனக்
குறிப்பிட்டுள்ளேன். ஆனால் இப்போது சென்னைப்
பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் இ.
சுந்தரமூர்த்தி அவர்கள் இந்நூலுக்கு ஒரு தௌ¤வுரை
வரைந்து 1987-இல் வெளியிட்டுள்ளார்கள்.
இவ்வறுவகை இலக்கணம் மூலம்மட்டும் ஏழாமிலக்கண
மூலத்தோடு சேர்த்து நூலாசிரியர் காலத்திலேயே
அஷ்டாவதானம் பூவை. கல்யாணசுந்தர முதலியார்
அவர்களைக் கொண்டு தஞ்சாவூர் ஷாப்பு ப.வெ.
வெங்கட்டராம ராஜா அவர்களால் 1893-ஆம் ஆண்டு
பதிப்பிக்கப்பட்டது. எனினும் அதன் படிகள் இன்று
கண்ணால் காணவும் கிடைத்தற்கரியன ஆயின.
எனவே திருப்பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க
இராமசாமி அடிகளார் அவர்கள் தவத்திரு சாந்தலிங்க
அடிகளார்