Primary tabs
பார்கொண்ட பாதத்தை யேந்திப் பகருவன் பாட்டியலைத்
தேர்கொண்ட வல்குற் றுடிகொண்ட சிற்றிடைச்
செந்துவர்வாய்
வார்கொண்ட பூண்முலை வேல்கொண்ட வாள்விழி
வாணுதலே.
(உரை I). என்பது சூத்திரம் என்னுதலிற்றோவெனின் சிறப்புப்பாயிரம் உணர்த்துதல் நுதலிற்று.
சிறப்பென்னும் பாயிர மாம்”
(பழஞ் சூத்திரம்)
‘கார் கொண்ட’ என்றெடுத்து ‘ஏத்தி’ எனவே, தெய்வ வணக்கமாயிற்று; ‘பகருவன் பாட்டியலே’ எனச் செயப்படு பொருளாயிற்று; ‘தேர்கொண்டவல்குல்’ என்பது முதலாக மகடூஉ முன்னிலை, செய்யுளை நோக்கி வந்தது.
(உரை II). மேக வண்ணமாய் இருக்கப்பட்ட திருமேனியையும், இரத்தம் தோய்ந்து சத்துருக்களைச் சயித்த சக்கராயுதத்தையும், தாமரைப் பூவையொத்த கண்ணையும் உடையவனான ஸ்ரீவாசுதேவனுடைய பூமியை அளந்துகொண்ட திருவடியைத் தோத்திரம் பண்ணிப் பாவும் பாவினமும் கூட்டிப் பாடுகின்ற பிரபந்தங்களுக்கு இலக்கணம் சொல்லுவன், தேர் போன்ற...........,நுதலையுமுடையாய், கேட்பாயாக என்றவாறு.
அஃதேல், இதனுள்மகடூஉ முன்னிலை என்று சொல்லப்படுவது யாரையோவெனின், சத்தி தேவியைச் சேவிக்கப்பட்ட பெண்கள் பதினாறு பேருண்டு; அவர்கள் பேர் மாலினி, மோகினி, யோகினி, போகினி, வீணி, பராயணி, கபாலி, கபாலயோசனி, அற்புதை, விந்தை, 2அனிதை, வனிதை,
(பி - ம்) 1 ‘பகர்வன்’ 2 ‘அணிதை’