தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மாறனலங்கார வரலாறு

ஸ்ரீ :

மாறனலங்கார வரலாறு

அலங்காரமென்பது செய்யுளுக்கு அழகுசெய்யும் லக்ஷணங்களைக் கூறும் சாஸ்திரம். இவ்வலங்கார சாஸ்திரத்தை வடமொழியாளர் மிகவும் விரும்பிக் கற்பர். இந்தச் சாஸ்திரத்தின்பெருமை அக்நிபுராணத்திற் பேசப்பட்டுள்ளது. வாமநசூத்திரம், காவ்யாதர்சம், ஸரஸ்வதீகண்டா பரணம், காவ்யப்ரகாசம், அலங்காரஸர்வஸ்வம், ரஸமஞ்சரி, ஸாஹித்ய தர்ப்பணம், ப்ரதாபருத்ரீயம், அலங்கார கௌஸ்துபம், சந்திராலோகம், குவலயானந்தம், சடவைரிவைபவதிவாகரம் (இது நம்மாழ்வார் விஷயமான வடமொழி மாறனலங்காரம்) முதலிய நூற்றுக்கணக்கான வடமொழி நூல்கள் அலங்காரத்தைப் பற்றிச் சொல்பவைகள். தமிழில் முதன்முதல் அணியைப் பற்றித் தெரிவிக்கும் நூல் தொல்காப்பியம். தொல்காப்பியர் கூறுவது உவமை ஒன்றுதான். அவர் அகத்திணையியலில் ஏனையுவமம் உள்ளுறையுவம மிவைகளை விளக்கி உவமவியலில் உவமத்தைத் தொழில், பயன், வடிவு, வண்ணம் எனப் பிரித்து விரித்தெழுதியிருக்கிறார். தொல்காப்பியர் காலத்து உவமையொன்றே அணியாகக் கருதப்பட்டது. பிற்காலத்தார் அதிலிருந்து பல அணிகள் கற்பித்துக் கொண்டனர். நச்சினார்க்கினியரும் உவமமொன்றனையே அணியாகக் கருதினர். இவர் தம் காலத்திற் பல அணிவிகற்ப வேறுபாடுகளுடன் வெளிவந்த ஒரு அணி நூலைத் தமது தொல்காப்பிய வுரையிற் குறைகூறுகின்றனர். இவர் உவமவிகற்பங்களுக்கு எடுத்துக்காட்டிய உதாரணச் செய்யுள்கள் சில, தண்டியலங்காரவுரையில் வேற்றுமையணி, தற்குறிப்பேற்றவணி முதலியவைகளுக் குதாரணமாகக் காட்டப்பட்டிருக்கின்றன. நிரனிறை, சமம் முதலியவற்றை உவமத்தின் விகற்பமாயே கொண்டார் நச்சினார்க்கினியர். இப்படி உவமமே பலவணிகளினுற்பத்திக்குங் காரணமாயிருந்தது என்பதை வடமொழியாளரும் சம்மதிக்கின்றனர். அப்பையதீக்ஷிதர் தாமெழுதிய சித்திரமீமாம்ஸை யென்னுங் கிரந்தத்தில் இவ்விஷயத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். அச்சுலோகம் வருமாறு :-

புதுப்பிக்கபட்ட நாள் : 07-08-2017 20:13:38(இந்திய நேரம்)