தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அகம்பல்மால் ஆதனார்


அகம்பல்மால் ஆதனார்

81. முல்லை
இரு நிலம் குறையக் கொட்டிப்பரிந்தின்று
ஆதி போகிய அசைவு இல் நோன் தாள்,
மன்னர் மதிக்கும் மாண் வினைப் புரவி
கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப,
5
பூண்கதில்-பாக!-நின் தேரே: பூண் தாழ்
ஆக வன முலைக் கரைவலம் தெறிப்ப
அழுதனள் உறையும் அம் மா அரிவை
விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய
முறுவல் இன் நகை காண்கம்!-
10
உறு பகை தணித்தனன், உரவு வாள் வேந்தே.
வினை முற்றிய தலைவன்தேர்ப்பாகற்கு உரைத்தது.-அகம்பன்மாலாதனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:14:54(இந்திய நேரம்)