தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இளந்தேவனார்


இளந்தேவனார்

41. பாலை
பைங் கண் யானைப் பரூஉத் தாள்உதைத்த
வெண் புறக் களரி விடு நீறு ஆடி,
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபயப்
பாஅர் மலி சிறு கூவலின் தணியும்
5
நெடுஞ் சேண் சென்று வருந்துவர் மாதோ-
எல்லி வந்த நல் இசை விருந்திற்கு,
கிளர் இழை அரிவை! நெய் துழந்து அட்ட
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி,
சிறு நுண் பல் வியர் பொறித்த
10
குறு நடைக் கூட்டம் வேண்டுவோரே.
பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி உலகியல்கூறி வற்புறுத்தியது.-இளந்தேவனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:16:24(இந்திய நேரம்)