தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

போதனார்


போதனார்

110. பாலை
பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்
விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்தி,
புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்,
'உண்' என்று ஓக்குபு பிழைப்ப, தெண் நீர்
5
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,
அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய, பந்தர் ஓடி,
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்?
10
கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென,
கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்,
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல,
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே!
மனைமருட்சி; மகள்நிலை உரைத்ததூஉம் ஆம்.-போதனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:29:04(இந்திய நேரம்)