தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அவ் வளை வெரிநின்


அவ் வளை வெரிநின்

25. குறிஞ்சி
அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன
செவ் வரி இதழ சேண் நாறு பிடவின்
நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப்
பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம்
5
வள மலை நாடன் நெருநல் நம்மொடு
கிளை மலி சிறு தினைக் கிளி கடிந்து அசைஇ,
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன்; பெயர்ந்தது
அல்லல் அன்று அது-காதல் அம் தோழி!-
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா
10
வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி
கண்டும், கழல் தொடி வலித்த என்
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே!
தலைமகளைத் தோழி குறை நயப்புக் கூறியது.- பேரி சாத்தனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:44:17(இந்திய நேரம்)