தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வண்டல் தைஇயும்


வண்டல் தைஇயும்

254. நெய்தல்
வண்டல் தைஇயும், வரு திரை உதைத்தும்,
குன்று ஓங்கு வெண் மணற் கொடி அடும்பு கொய்தும்,
துனி இல் நல்மொழி இனிய கூறியும்,
சொல் எதிர் பெறாஅய் உயங்கி, மெல்லச்
5
செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப!
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின்
அயினி மா இன்று அருந்த, நீலக்
கணம் நாறு பெருந் தொடை புரளும் மார்பின்
துணை இலை தமியை சேக்குவை அல்லை-
10
நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி,
வானம் வேண்டா உழவின் எம்
கானல்அம் சிறு குடிச் சேந்தனை செலினே
தோழி படைத்து மொழிந்தது.-உலோச்சனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:53:14(இந்திய நேரம்)