தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஓங்கு மலை நாட


ஓங்கு மலை நாட

55. குறிஞ்சி
ஓங்கு மலை நாட! ஒழிக, நின் வாய்மை
காம்பு தலைமணந்த கல் அதர்ச் சிறு நெறி,
உறு பகை பேணாது, இரவின் வந்து, இவள்
பொறி கிளர் ஆகம் புல்ல, தோள் சேர்பு
5
அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின்,
கண் கோள் ஆக நோக்கி, 'பண்டும்
இனையையோ?' என வினவினள், யாயே;
அதன் எதிர் சொல்லாளாகி, அல்லாந்து,
என் முகம் நோக்கியோளே: 'அன்னாய்!-
10
யாங்கு உணர்ந்து உய்குவள்கொல்? என, மடுத்த
சாந்த ஞெகிழி காட்டி-
ஈங்கு ஆயினவால்' என்றிசின் யானே.
வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழி தலைவற்குச் சொல்லியது.-பெருவழுதி

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:55:51(இந்திய நேரம்)