தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வேட்டம் பொய்யாது


வேட்டம் பொய்யாது

38. நெய்தல்
வேட்டம் பொய்யாது வலைவளம்சிறப்ப,
பாட்டம் பொய்யாது பரதவர் பகர,
இரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும்
ஆர் கலி யாணர்த்துஆயினும், தேர் கெழு
5
மெல்லம் புலம்பன் பிரியின், புல்லெனப்
புலம்பு ஆகின்றே-தோழி! கலங்கு நீர்க்
கழி சூழ் படப்பைக் காண்டவாயில்,
ஒலி காவோலை முள் மிடை வேலி,
பெண்ணை இவரும் ஆங்கண்
10
வெண் மணற் படப்பை, எம் அழுங்கல் ஊரே.
தலைவி வன்புறை எதிர்அழிந்து சொல்லியது.-உலோச்சனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:57:21(இந்திய நேரம்)