தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கல் ஊற்று ஈண்டல


கல் ஊற்று ஈண்டல

186. பாலை
கல் ஊற்று ஈண்டல கயன் அற, வாங்கி,
இரும் பிணர்த் தடக் கை நீட்டி, நீர் நொண்டு,
பெருங் கை யானை பிடி எதிர் ஓடும்
கானம் வெம்பிய வறம் கூர் கடத்திடை,
5
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து,
பாண் யாழ் கடைய, வாங்கி, பாங்கர்
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில-
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு
காமர் பொருட் பிணி போகிய
10
நாம் வெங் காதலர் சென்ற ஆறே.
பிரிவிடை மெலிந்த தோழிக்குத் தலைவி சொல்லியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:59:03(இந்திய நேரம்)