தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தூங்கல் ஓலை


தூங்கல் ஓலை

135. நெய்தல்
தூங்கல் ஓலை ஓங்கு மடற் பெண்ணை
மா அரை புதைத்த மணல் மலி முன்றில்,
வரையாத் தாரம் வரு விருந்து அயரும்
தண் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர்
5
இனிது மன்றம்ம தானே-பனி படு
பல் சுரம் உழந்த நல்கூர் பரிய,
முழங்கு திரைப் புது மணல் அழுந்தக் கொட்கும்,
வால் உளைப் பொலிந்த, புரவித்
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே.
'வரைவு நீட்டிப்ப அலர்ஆம்' எனக் கவன்ற தோழி சிறைப்புறமாகச்சொல்லியது.-கதப்பிள்ளையார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:06:52(இந்திய நேரம்)