தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நீள் மலைக் கலித்த


நீள் மலைக் கலித்த

301. குறிஞ்சி
'நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி
நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,
மயில் ஓரன்ன சாயல், செந் தார்க்
5
கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள்,
பாவை அன்ன வனப்பினள் இவள்' என,
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி,
யாய் மறப்பு அறியா மடந்தை-
தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே.
சேட்படுத்து, 'பிரிவின்கண் அன்பின் இயற்கையில் தகுவகையதோர் ஆற்றாமையி னான்' என்று, தோழி தன்னுள்ளே சொல்லியது.-பாண்டியன் மாறன் வழுதி

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:10:37(இந்திய நேரம்)