தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நெடுந் தண் ஆரத்து


நெடுந் தண் ஆரத்து

292. குறிஞ்சி
நெடுந் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த
பசுங் கேழ் இலைய நறுங் கொடித் தமாலம்
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும்,
யாணர் வைப்பின், கானம் என்னாய்;
5
களிறு பொரக் கரைந்த கயவாய்க் குண்டு கரை
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும்
கருங் கற் கான்யாற்று அருஞ் சுழி வழங்கும்
கராஅம் பேணாய்; இரவரின்,
வாழேன்-ஐய!-மை கூர் பனியே!
இரவுக்குறி மறுத்தது.- நல்வேட்டனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:11:01(இந்திய நேரம்)