தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பருவரல் நெஞ்சமொடு


பருவரல் நெஞ்சமொடு

18. பாலை
பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல
வருவர் வாழி-தோழி!-மூவன்
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்,
கானல்அம் தொண்டிப் பொருநன், வென் வேல்
5
தெறல் அருந் தானைப் பொறையன், பாசறை,
நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர்
திரை தபு கடலின் இனிது கண் படுப்ப,
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத்
தடாஅ நிலை ஒரு கோட்டன்ன,
10
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே.
பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.-பொய்கையார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:13:02(இந்திய நேரம்)