தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பெருங் கடல் முழங்க


பெருங் கடல் முழங்க

117. நெய்தல்
பெருங் கடல் முழங்க, கானல் மலர,
இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர,
வள் இதழ் நெய்தல் கூம்ப, புள் உடன்
கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேர,
5
செல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம்
கல் சேர்பு நண்ணிப் படர் அடைபு நடுங்க,
புலம்பொடு வந்த புன்கண் மாலை
அன்னர் உன்னார் கழியின், பல் நாள்
வாழலென்-வாழி, தோழி!-என்கண்
10
பிணி பிறிதாகக் கூறுவர்;
பழி பிறிதாகல் பண்புமார் அன்றே.
வரைவு நீட ஆற்றாளாய தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது; சிறைப்புறமும்ஆம்.-குன்றியனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:15:30(இந்திய நேரம்)