தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பெருங் களிறு... அட்டென


பெருங் களிறு... அட்டென

47. குறிஞ்சி
பெருங் களிறு உழுவை அட்டென, இரும் பிடி
உயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது,
நெய்தற் பாசடை புரையும் அம் செவிப்
பைதல்அம் குழவி தழீஇ, ஒய்யென
5
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும்
கானக நாடற்கு, 'இது என' யான் அது
கூறின் எவனோ-தோழி! வேறு உணர்ந்து,
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி,
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து,
10
அன்னை அயரும் முருகு நின்
பொன் நேர் பசலைக்கு உதவாமாறே?
சிறைப்புறமாகத்தோழி தலைமகளுக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-நல்வெள்ளியார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:15:36(இந்திய நேரம்)